July Matham (From "Pudhiya Mugam")

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

வெட்ட வெளியில் போவோமா
அடி சிட்டுக்குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்

காடு மலைகள் தேசங்கள்
காண்போமா காற்றை கேள்
வீடு வேண்டாம் கூடொன்று
வேண்டாமா காட்டை கேள்

காதல் என்று சொன்னதும்
காற்றும் கைகள் கட்டும்
காதல் என்னும் வார்த்தை தான்
சர்வதேச சட்டம்

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையால் மூடாதே

காதல் வந்தால்
கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து
I love you சொல்லிப்பார் ஓடாதே

காதல் என்னும் ஏட்டிலே
நீயும் நானும் உச்சம்
கோடி மக்கள் வேண்டுகோள்
கொஞ்சம் வைப்போம் மிச்சம்

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link