Unna Vida

உன்ன விட
இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல

உன்ன விட
இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல
உன்ன விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாரும் இல்ல, யாரும் இல்ல

வாக்குபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்ன விட
உன்ன சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்ல, எவளுமில்ல
உன்ன விட, என்ன விட

அள்ளி கொடிய காத்து அசைக்குது
அசையும் கோலத்துக் உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்ன போலவே அலை பாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்ம பார்த்து சோடி சேருது
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம்
அணல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கணா கணா வந்து கொல்லுது
இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா?

உன்ன விட

காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கயில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு துணி

உன்ன விட

உன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா?
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய?)
(100 ஜென்மம் உன் கூட)
(போதுமா?)

நூறு ஜென்மம் நமக்கு போதுமா?
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்த அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும் இருக்கணும் கலக்கணும்

உன்ன விட
இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல
உன்ன விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாரும் இல்ல, எவளுமில்ல

வாழ்க்க தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாரும் இல்ல, எவளுமில்ல
என்ன விட, உன்ன விட



Credits
Writer(s): Vairamuthu, Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com

Link