Aaraaro Aaro

ஆராரோ ஆரோ நீ யாரோ... யாரோ
ஆராரோ ஆரோ நான் யாரோ... யாரோ...
கேட்காத வெண்ணிலா என் வீட்டில் வளருதோ
தூங்காத தென்றலா தொட்டில் மேல் தூங்குதோ
தாழங்குடையில் வாய் மூடயில் தம்பி நீ தூங்கு
நாளை நமதே நாளை நமதே தம்பி நீ தூங்கு
எப்போதும் போராடு இப்போது நீ தூங்கு (ஆராரோ)

செவ்வாழை பூவே சில்வண்டே தூங்கு
பூவோட வாசம் போல பொன்னே நீ தூங்கு
சொல்லாமல் படை வரும்
நில்லாமல் பகைவரும்
அப்போது வாள் எடு இப்போது ஓய்வெடு
தாங்குடையில் வாய்மூடயில் தம்பி நீ தூங்கு
நாளை நமதே நாளை நமதே நம்பி நீ தூங்கு
மண் ஈரம் போகலாம் நம் வீரம் போகுமோ
நீ உண்ட தாய் பாலில் மண் வாசம் வீசுமே
எப்போதும் போராடு இப்போது நீ தூங்கு



Credits
Writer(s): Vairamuthu, Deepak Dev
Lyrics powered by www.musixmatch.com

Link