En Vizhigal Meedhu

என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
ஒரு வானத்தீயில் நான் பற்றி எறிகிறேன்
என் விரல்கள் மீது உன் விரல்கள் மோதி
ஒரு வானத்தீயில் நான் முற்றும் துறக்கிறேன்
என் வயது மீது உன் வயது மோதி
ஒரு வானத்தீயில் மெதுவாய் மெதுவாய்
இதயம் உருகிடுதே
என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
ஒரு வானத்தீயில் நான் பற்றி எறிகிறேன்

இடையில் இருக்கும் தடையை உடைத்து
இரண்டு இதழ் முதல்முறை இணைய
இறுகி கிடக்கும் இளமை உணர்வு
அணையை விட்டு கரையினை உடைக்கிறது
வார்த்தை தொலைந்து வேறு மொழியில்
உதடு இன்று விரத்ததில் உளற
மொழிகள் தொலைந்து வெட்கம் எடுத்து
உடலும் இன்று அணிந்திட தொடங்கியதே
காமம் அது இல்லாத காதலது இங்கேது
காமம் அது இல்லாத காதலது செல்லாது
நதியில் விழுந்த நிலவும் நனைகிறது

என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
ஒரு வானத்தீயில் நான் பற்றி எறிகிறேன்
என் விரல்கள் மீது உன் விரல்கள் மோதி
ஒரு வானத்தீயில் நான் முற்றும் துறக்கிறேன்

தேடித்தொலைந்து விடும் தேடல் இதுவல்லவா
தேகம் கரைந்தே போகும் தெய்வீகம் இதுதான்
மூளை உருக்கிவிடும் தியானம் இதுவல்லவா
வானம் பூமிக்கு எல்லாம் பூர்வீகம் இதுதான்
உறவிலே பிரிவுண்டு பிரிவிலும் சுகமுண்டு
பிரிந்தபின் சேர்ந்தோம் கலந்தோம் சுகமாய்
காதலில் மரபுண்டு மரபிலும் செலவுண்டு
புரிந்தபின் இணைந்தோம் புனைந்தோம் இதமாய்
நதியில் விழுந்த நிலவும் நனைகிறது
என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
ஒரு வானத்தீயில் நான் பற்றி எறிகிறேன்
என் விரல்கள் மீது உன் விரல்கள் மோதி
ஒரு வானத்தீயில் நான் முற்றும் துறக்கிறேன்



Credits
Writer(s): P.b. Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link