Naane Indhiran

நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை குச்சலிலே
தட்டுகிற ஓசையிலே
சுத்தி வரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
காக்கி சட்ட நாட்டாம நானே
கைது பண்ணும வேலை இல்லை
அண்ண தம்பி சண்டைக்கு வீணா
கேசு போட தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே
வீராப்பா திரிவதில்லை
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா

ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும் தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
பரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும் டா
என்ன போல பேரோட இருக்கணும் டா
கத்துதரவா ஒத்துகிடவா
கத்துதரவா வா வா ஒத்துகிடவா
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்

ஹே சீறிவரும் காள கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்ட போட்ட சிங்கம்

கருக்கு வேல்லையனாறு கலையத்தான் நிக்குராறு
களவாணி யாரும் வந்தா கலவாங்க விடமாட்டாறு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்க மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏழுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா
வேண்டிகிடவா வெற்றி தரவா

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்



Credits
Writer(s): Viveka, Devisri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link