Kadhal Pambu kothivittathey

தா-தத-தா-தத-தா-தத
தா-தத-தா-தத-தா-தத
தா-தத-தா-தத-தா-தத
தா-தத-தா-தத-தா-தத

Let's go
காதல் பாம்பு உன்னை கொத்திவிட்டதே
உன் நாடி நரம்பெல்லாம் செத்துவிட்டதே

காதல் பாம்பு உன்னை கொத்திவிட்டதே
உன் நாடி நரம்பெல்லாம் செத்துவிட்டதே

நான் சொல்லச் சொல்ல கொள்ளை செய்வது என்னடி?
நீ தேவையில்லை தூரம் தள்ளிச் செல்லடி

ஹையோ-ஹையோ-ஹை-ஹை-ஹயோ

இந்த காதல் நாடகமடி
இந்த காதல் நாடகமடி

காதல் பாம்பு என்னை கொத்தவில்லையே
என் நாடி நரம்பெல்லாம் சாகவில்லையே

இதையத்தின் அன்பெல்லாம் பரிமாறிக் கொண்டேனே
உலகத்தின் அழகெல்லாம் உனக்குள்ளே குடி ஏறும்

விளக்காமல் நிழல் போல துணையாக வந்தாலே
நிமஷங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பரிசாகும்

காதல் என்றால் அத்தனையும் கிட்டுமே
பெண் கை பிடித்தால் தொந்தரவும் இஷ்டமே

ஹே காதலித்தால் நீ மனிதன் ஆவாய்
கண்ணுக்கு அழகாய் எல்லாம் பெறுவாய்
உன்னை நீயே உணர்ந்துக்கொள்வாய்
எல்லோருக்கும் அன்பை தருவாய்
எதையும் தாங்கும் இதயம் பெறுவாய்
குட்டிச் சுவரை கோட்டை ஆக்குவாய்
ஆஹா-ஆஹ, ஓஹோ-ஓஹொஹொ

காதல் பாம்பு உன்னை கொத்திவிட்டதே
உன் நாடி நரம்பெல்லாம் செத்துவிட்டதே

காதலில் விழாதே, கை தூக்க ஆளில்லை
தாய் தந்தை அன்பை போல் வேறொன்றும் ஈடில்லை

காலத்தை வீணாக்கும் காதலை நம்பாதே
கடைசியில் உயிர் வாங்கும் பின்னால் நீ செல்லாதே

காதலித்தால் நீர் வடிக்கும் கண்களே
பெண் கண்ணடித்தாள் அத்தனையும் சிக்கலே

காதலிக்காதே பைத்தியம் ஆவாய்
கண்கள் ரெண்டும் குருடாய் போவாய்
தூக்கம் கெட்டு உடலும் தேய்வாய்
ஏக்கம் தானே தினமும் சாவாய்
எண்ணி எண்ணி இளைத்து போவாய்
எல்லோரையும் பகைத்து கொள்வாய்
ஹையோ-ஹையோ
அச்சோ-அச்சச்சோ

காதல் பாம்பு என்னை கொத்தவில்லையே
என் நாடி நரம்பெல்லாம் சாகவில்லையே



Credits
Writer(s): Yugabharathi, Dhina
Lyrics powered by www.musixmatch.com

Link