Kaatrile

ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே
விழுந்தோம்
எழுந்தோம்

காற்றிலே காற்றிலே
ஈரங்கள் கூடுதே
கண்களின் நீர் அது
காற்றினில் சேருதே

நீயென்று நான் என்று தனியானது
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது

ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே

காற்றிலே காற்றிலே
ஈரங்கள் கூடுதே
கண்களில் நீர் அது
காற்றினில் சேருதே

நதி போகும் வழியில் யாரும்
அணை போட்டு தடுத்திட கூடும்
மேகத்தில் அணை போட வழி இல்லையே
நிகழ் காலம் கண்ணின் முன்னே
வருங்காலம் கனவின் பின்னே
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே

இரவும் பகலும் நகரும்
வெயிலும் மழையும் தொடரும்
இதயம் இணையும் தருணம்
வருமா
இருளும் ஒளியும் பழகும்
விடிந்தும் விடியா நிமிடம்
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும்
கனவா

பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே

ஒரு வானம் போதாதென்று
பல வானம் கேட்போம் என்று
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே
நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்
இப்போது கைகள் கோர்த்தோம்
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே

இதமும் பதமும் யுத்தம்
இடையில் உயிரின் சத்தம்
இதயம் முழுக்க கேட்டால்
சுகமே
எதிரும் புதிரும் வானம்
இருந்தும் நெஞ்சில் வீரம்
அன்பே என்றும் இன்பம்
தருமே

ஆயிரம் ஆயுதம் எதிர் வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக
பூ ஒன்று மலர்ந்திடுமே

காற்றிலே காற்றிலே
ஈரங்கள் கூடுதே
கண்களின் நீர் அது
காற்றினில் சேருதே

நீயென்று நான் என்று தனியானது
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakesh Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link