Kaadhalaa Kaadhalaa

காதலா காதலா காதலின் சாரலா?
காதலா காதலா காதலின் சாரலா?
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்
காதலா காதலா காதலின் சாரலா?

இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை

தனிமையில் இன்று
நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை
நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ?

காதலா காதலா காதலின் சாரலா?

பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன்
பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்

பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன?
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?
மலர்களெல்லாம் பொன் முடைப்பதென்ன?
ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?

காதலா காதலா காதலின் சாரலா?
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலின் சாரலா?



Credits
Writer(s): S. Rajkumar, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link