Sottavaala

சொட்டவாள சொட்டவாள
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி

ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுபோல
சுட்டி ஆட்டம் ஆடவந்த சுந்தரா

ஹே வட்ட வட்ட பொட்டுக்காரியே
என் கன்னம் ரெண்டில்
விட்டு விட்டு முத்தம் போடடி
கெட்டி கெட்டி கெட்டிகாரனே
உன்கையில் பூக்கும்
மொட்டு மொட்டு மொட்டு பூங்குடி

நீயாச்சு நானுமாச்சு
நெத்தி பொட்டில் இச்சு வச்சு
நெஞ்சுகூடில் கிச்சு கிச்சு
பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்

மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி

சொட்டவாள சொட்டவாள
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி

ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுபோல
சுட்டி ஆட்டம் ஆடவந்த சுந்தரா

ஏ ராஜ மார்த்தாண்டனே
நான் மச்சம் உள்ள மானு
நீ மட்டும் தானே ஆணு
என் தேகம் எங்கும் தேனு
நீ எச்சில் பண்ணாதே

அடி சீனிச் சிங்காரியே
நீ கால் மொளச்ச மீனு
ஓங் காலு ரெண்டும் தூணு
ஒங் கச்சுக்குள்ள தேனு
நீ தப்பிச் செல்லாதே

கண்ணாலே கர்ப்பம் செய்யாதே
கன்னம்தொட்டுக் கன்னம்தொட்டுக் கன்னம் வைக்காதே

மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி

சொட்டவாள சொட்டவாள
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி

வாடி சிந்தாமணி
நீ அத்தை பெத்த திண்ண
நான் வச்சுக்கிர்றேன் ஒன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன
நீ எட்டிச் செல்லாதே

வீர மாவேந்தனே
நீ வெட்டிவச்ச தேக்கு
என் வெத்தலைக்குப் பாக்கு
அட ஊறுதடா நாக்கு
நீ ஓடிப் போகாதே

பந்தாலே ரோஜாப் பந்தாலே
பச்சநெஞ்சப் பச்சநெஞ்சப் பத்த வைக்காதே

மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
நான்தான் உன் மந்தாகினி

சொட்டவாள சொட்டவாள
சொட்டவாளக் குட்டிபோல
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி

ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுபோல
சுட்டி ஆட்டம் ஆடவந்த சுந்தரா



Credits
Writer(s): Srimani, Prasad G Devi Sri
Lyrics powered by www.musixmatch.com

Link