Alaiye Alaiye

அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை

ஒரு துளியானேன்
உன்னாலே இன்று
கடலானேன் பெண்ணாலே
என் உயிரெல்லாம் தேனாக
ஒரு வார்த்தை சொன்னாலே

அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை
மொட்டுக்குள்ளே
வாசம் போலே கட்டுப்பட்டு நின்றாயே
முட்டிச்செல்லும் காற்றாய்
வந்து தொட்டு திறந்து கொண்டேனே

உனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லை
கருணை பார்வை நீ பார்த்தாய்
கரையில் கூட மீன் தொல்லை
முகத்திரையை கழற்றிக் கொண்டாய்
சிறகுகளை அணிந்து கொண்டேன்
அலையாடிய அலையாடிய கரையில்
விளையாடிய விளையாடிய பறவை
மடியேறுது மடியேறுது மார்கழியே

அலையே அலையே
அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல்
சொன்னது யார்
பிறந்தேன் பிறந்தேன்
இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய்
மண்ணில் நானில்லை

ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை
உந்தன் இதழில் தித்திக்க
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை
உந்தன் கண்ணில் ஒட்டிக்க

எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில் போனாலும்
வேரின் வாழ்வு மண்ணோடு

நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்
நீர் விழுந்தால் மண் மடியில்
நான் விழுந்தால் உன் மடியில்

கடலோ கடல் இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே

ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ



Credits
Writer(s): Vidya Sagar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link