Poo Pookkum Satham

சாறேறி-சாறேறி
சாறேறி-சாறேறி
இயற்கை எனும்
தாய்மடியில்
பால் குடிக்கும் பைங்கிளி நான்
ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம்

பூ பூக்கும் சத்தம் கேட்டேன்
பூங்கிளியின் முத்தம் கேட்டேன்
புல்லின்மேலே பனித்துளி ஒன்று
புரண்டு படுக்கும் ஓசை கேட்டேன்
என்னை சுற்றி சத்தம் கேட்கிறேன்
எந்தன் நெஞ்சில் மௌனம் காக்கிறேன் (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)

பூ பூக்கும் சத்தம் கேட்டேன்
பூங்கிளியின் முத்தம் கேட்டேன்
புல்லின்மேலே பனித்துளி ஒன்று
புரண்டு படுக்கும் ஓசை கேட்டேன்
என்னை சுற்றி சத்தம் கேட்கிறேன்
எந்தன் நெஞ்சில் மௌனம் காக்கிறேன் (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)

வெளிச்சம் வெளிச்சம் வந்த விளக்கெது கிழக்கு (ஆ-ஆ-ஆ)
விடியும் வானத்துக்கு விளம்பரம் எதுக்கு? (ஆ-ஆ-ஆ)
உலகம் பூட்டப்பட்டு இரும்புக்குள் இருக்கு
உதயசூரியனே தங்ககாப்பு நமக்கு

திறப்பவன் திறந்தால் கல்லுக்குள் இருந்து
சிலை ஒன்று வெளியேறும் ஓ-ஓ-ஓ
திறமைகள் இருந்தால் பட்டுப்புழு கூட
சிறகுகள் முளைத்து பறவையாய் மாறும்
போராடும் ஜீவன் வெல்லுமே ஓ-ஓ-ஓ
போராடி வெல்வாய் உள்ளமே

பூ பூக்கும் சத்தம் கேட்டேன்
பூங்கிளியின் முத்தம் கேட்டேன்
புல்லின்மேலே பனித்துளி ஒன்று
புரண்டு படுக்கும் ஓசை கேட்டேன்
என்னை சுற்றி சத்தம் கேட்கிறேன்
எந்தன் நெஞ்சில் மௌனம் காக்கிறேன்

ஆஹ்-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

நமக்கு நமக்கு என்று கொடுத்தது இயற்கை (ஆ-ஆ-ஆ)
தனக்கு தனக்கு என்று ஓதுக்குதல் செயற்கை (ஆ-ஆ-ஆ)
எறும்பின் தலை அளவு சிறியது வாழ்க்கை
இருந்தும் கடல் அளவு பெரியது வேட்கை

ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு திறமை
இயற்கையின் கொடை தானே ஓ-ஓ-ஓ
மழைத்துளி நடுவே உடல் நனையாமல்
பறக்கின்ற பறவை கொசு ஒன்று தானே
ஜென்மஜென்மம் வாழும் பூமியில் ஓ-ஓ-ஓ
நானும் கூட வாழ்ந்தே காட்டுவேன்

பூ பூக்கும் சத்தம் கேட்டேன்
பூங்கிளியின் முத்தம் கேட்டேன்
புல்லின்மேலே பனித்துளி ஒன்று
புரண்டு படுக்கும் ஓசை கேட்டேன்
என்னை சுற்றி சத்தம் கேட்கிறேன்

நனநனநானா நானான (ஹஹஹஹா)
நனநனநானா நானான (ஹஹஹஹா)



Credits
Writer(s): Deva, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link