Karigalan

கரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு
சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
ஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்கைப் போல பளபளக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு
சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
ஏய் உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

ஏய் பால வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்கு
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக் கட்டு காளை
கரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு
சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெறங்கடிக்கிற ஜின்னு

பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக் கல்லு

சுருக்கு பைய போல் இருக்குது இடுப்பு
இடுப்பு இல்ல இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு

கண்ணு பட போகுதின்னு கன்னத்திலே மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வைச்ச மிச்சம்
கரிகாலன் காலப்போல கரித்திருக்கு கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ் மகால் நிழலு
சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
ஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்கைப் போல பளபளக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து



Credits
Writer(s): Kabilan, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link