Kovakkara Kiliye

கோவக்காரக் கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே

கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா
ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே
அட காதல் இதுதானா

கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே

ஏ சூரியகாந்திப் பூவப்போல
முகத்த திருப்புறியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல
செதரி ஓடுறியே

ஏ அழகா நீயும்
இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய
என்ன தொறத்துறியே

மயிலாப்பூரு மயிலே
ஒரு இறகு போடம்மா
என் சொந்த ஊரு மதுரை
அட தள்ளி நில்லையா

உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல
சரிதான் போடி புள்ள
மேயாத ஆடு இல்ல
மேயாட்டி புல்லும் இல்ல
சவடால் தேவையில்ல

ஏனோ ஏனோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா
ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா

கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே

ஆஆஹா
சித்திரமாச வெயிலப்போல
சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா
என்ன சுத்துறியே

ஏய் பத்தரமாத்துத்
தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல
முறுக்கா இருக்கிறியே

ஏய் பத்திரம் போட்டகையால்
ஒரு பதியம் போடைய்யா
பட்டா நீயும் தந்தா
நான் பயிரே வைப்பேனே

பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல
காதல் இதுதானா

கண்ணாடி பாக்கவில்ல
முன்னாடி நீயும்மில்ல
காதல் இதுதானா

ஓ ஏதோ ஏதோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா
ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா

கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link