Thirumana Malargal

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும்போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு

மாடி கொண்ட ஊஞ்சல்
மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

அந்த நிலை இங்கே இல்லை
அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை
அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா

தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி
காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு

மாதம் பத்து செல்ல
மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில்
கையிறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசுயிடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link