Kangal Kandadhu (From "Oru Kalluriyin Kadhai")

கண்கள் கண்டது கண்கள் கண்டது
கானல் நீராய் மாறிடுதே
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலைகிறதே

கண்கள் கண்டது கண்கள் கண்டது
கானல் நீராய் மாறிடுதே
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலைகிறதே

மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்தப் பாதையை திரும்பிப் பார்த்தேன்
காலடி எங்கே தெரியவில்லை

மரத்தின் கிளைகள் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்தப் பாதையை திரும்பிப் பார்த்தேன்
காலடி எங்கே தெரியவில்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
இ-இ-இ-இ-இ
இ-இ-இ

கண்கள் கண்டது கண்கள் கண்டது
கானல் நீராய் மாறிடுதே
கனவுகள் அடுக்கி கட்டியக் கோட்டை
காற்றும் மோதிட கலைகிறதே

ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஓ-ஓ

தோற்றம் திரும்பலாம்
தொட்டு நெருங்கலாம்
நிஜத்தின் காயங்கள் ஆறாதே
மாற்றம் நேரலாம்
மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே
அடுத்த நாட்கள் இங்கு பாத்திரமாக
நடந்த நாடகம் முடிகிறதே
வாழ்ந்த வாழ்க்கையைத் திருப்பித் தான் வாழ்ந்த
நட்பு என் மனது நெகிழ்கிறதே

அட தொப்பிள் கொடியின் உறவைத் தான்
என் ஞாபகம் அறிந்தது இல்லை
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
இ-இ-இ-இ-இ
இ-இ-இ

Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho-ho-ho
Ho-ho
Ho-ho-ho-ho-ho
Ho

காலச் சங்கிலி மீண்டும் இணையலாம்
காதல் சங்கிலி இணையாதே
காற்றுப் பேசித்தான் விதைத்த வார்த்தைகள்
கரைந்துப் போனது திரும்பாதே
பிடித்த கவிதையை எடுத்துப் படிக்கையில்
எழுத்துப் பிழை ஒன்று தெரிகிறதே
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்
காதல் பலமுறை கொல்கிறதே
நான் கனவுகள் வளர்த்துத் திரிந்தேனே
பல இரவும் பகலும் இங்கே
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை
என் நெஞ்சில் துயரம் இல்லை

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
இ-இ-இ-இ-இ
இ-இ-இ

கண்கள் கண்டது கண்கள் கண்டது
கண்ணீர் துளியில் கரையாதே
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிடக் கலையாதே

கண்கள் கண்டது கண்கள் கண்டது
கண்ணீர் துளியில் கரையாதே
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிடக் கலையாதே

மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்
மறுபடி பூத்திட மறுக்காதே
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்
மறுநாள் உதிக்கும் மறக்காதே

மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்
மறுபடி பூத்திட மறுக்காதே
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்
மறுநாள் உதிக்கும் மறக்காதே

ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
தொடர் கதைகள் தெரிந்துக் கொள்வாய்
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link