Oh Nenje

(அ-ஆ-ஆ)
(அ-அ-அ-ஆ)
(அ-ஆ-ஆ)
(அ-அ-அ-ஆ)

ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்
உன்னால் தன்னந்தனி தீவானேன்

ஓ நெஞ்சே தினம் உன் நினைவு தீயாகி சுடும்
எங்கு இனி நான் போவேன்

மனதோடு என் காதல் அலைபாயுதே
மழை நின்ற பின்னாலே குடை நீட்டுதே
கண்ணீர் துளிகள் மட்டுமே
வழி துணையாய் வந்ததே

ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்
உன்னால் தன்னந்தனி தீவானேன்

தோட்டத்தில் என் தோட்டத்தில்
ஒரு பூச்செடி பூத்ததடி
பார்க்கையில் கண் பார்க்கையில்
அது உதிர்ந்தே போனதடி
திருவிழா ஓர் திருவிழா
என் வாழ்வில் நடந்ததடி
குழந்தையாய் சிறு குழந்தையாய்
மனம் தொலைந்தே போனதடி
எழுதி வைத்த சிறுகதையில்
எழுத்து பிழைகள் இருக்கிறதே
காலம் போடும் விடுகதையில்
விடைகள் மறைந்து கிடக்கிறதே
விடை தெரிந்தாலும் என் அன்பே
வார்த்தை இன்றி ஊமையாகிறேன்

ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்
உன்னால் தன்னந்தனி தீவானேன்

(ஓ-ஓ)
(ஓ-ஓ)
(ஓ-ஓ)
(ஓ-ஓ-ஓ)
ஓ-ஓ (அ-அ-அ)

தேவதை ஒரு தேவதை என் எதிரே நின்றாளே
தூக்கத்தில் நான் இருந்ததால் அவள் தொலைந்தே போனாளே
ஆயிரம் ஓர் ஆயிரம் புதுகவிதை சொல்வாளே
மௌனமாய் நான் நின்றதால் அவள் மறைந்தே போனாளே
மீண்டும் மீண்டும் எழுதத்தான் காதல் ஒன்றும் தேர்வில்லை
என்ற போதும் என் நெஞ்சே உன்னை மறக்க தெரியவில்லை
எனை எரித்தாலும் என் அன்பே காதல் நெஞ்சம் வெந்துவிடாது

ஓ நெஞ்சே என்னை இன்னும் என்ன நீ செய்வாய்
உன்னால் தன்னந்தனி தீவானேன்
ஓ நெஞ்சே தினம் உன் நினைவு தீயாகி சுடும்
எங்கு இனி நான் போவேன்

மனதோடு என் காதல் அலைபாயுதே
மழை நின்ற பின்னாலே குடை நீட்டுதே
கண்ணீர் துளிகள் மட்டுமே
வழி துணையாய் வந்ததே

(அ-ஆ-ஆ)
(அ-அ-அ-ஆ)
(அ-ஆ-ஆ)
(அ-அ-அ-ஆ)



Credits
Writer(s): N Muthu Kumaran, Jack Anand
Lyrics powered by www.musixmatch.com

Link