Ennapetha

என்னைப் பெத்த ஆத்தான்னு இசை எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூகாம்பா
இந்த அண்டத்தை உண்டாக்கி அதில்
மண் உருண்டை ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடம் கொடுத்தா மூகாம்பா

என்னைப் பெத்த ஆத்தான்னு இசை எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூகாம்பா
இந்த அண்டத்தை உண்டாக்கி அதில்
மண் உருண்டை ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடம் கொடுத்தா மூகாம்பா

சின்னப் புத்தி உள்ள ஒரு
சின்னப்பய என்னையும்
சின்னப் புத்தி உள்ள ஒரு சின்னப்பய என்னையும்
தன்னுடைய புள்ளைம்பா மூகாம்பா
என்னக் குத்தம் செய்ஞ்சாலும்
மன்னிச்சு கருணைக் கொண்டு
தன்னோட அணைச்சுக்குவா மூகாம்பா

என்னைப் பெத்த ஆத்தான்னு இசை எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூகாம்பா
இந்த அண்டத்தை உண்டாக்கி அதில்
மண் உருண்டை ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடம் கொடுத்தா மூகாம்பா

Computer காலம் ஆச்சு காசதிகம் தேவையாச்சு
கண்ணு மண்ணு தெரியலியே
காடுமேடு அழிஞ்சிப்போச்சு கட்டிடங்கள் அதிகமாச்சு
கஷ்டம் மட்டும் குறையலியே
Computer காலம் ஆச்சு காசதிகம் தேவையாச்சு
கண்ணு மண்ணு தெரியலியே
காடுமேடு அழிஞ்சிப்போச்சு கட்டிடங்கள் அதிகமாச்சு
கஷ்டம் மட்டும் குறையலியே

விவசாயம் நின்னுப்போச்சு
வெதைகள் கூடக் கெட்டுப்போச்சு
விவசாயம் நின்னுப்போச்சு
வெதைகள் கூடக் கெட்டுப்போச்சு
வேலையும் கிடைக்கவில்லையே
வீடெல்லாம் TV ஆச்சு
வீதி எல்லாம் குப்பையாச்சு
வேதனையும் தாளவில்லையே

படிக்கும் படிப்புக்கொரு விலை குடுத்து வாங்குறான்
குடிக்கும் தண்ணியக் கூட கூலி தந்து குடிக்கறோம்
அடிபுடியில் அடுப்பை வைச்சு ஒலைய வைச்சு பாக்குறோம்
துடிக்கும் இந்த மனசுக்கென்ன விலை கொடுக்கப்போகுறோம்

சொன்னச் சொல்ல கேட்டுக்கடி மூகாம்பா
இதுக்கென்ன மருந்தென்று சொல்லு மூகாம்பா
சொன்னச் சொல்ல கேட்டுக்கடி மூகாம்பா
இதுக்கென்ன மருந்தென்று சொல்லு மூகாம்பா

என்னைப் பெத்த ஆத்தான்னு இசை எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூகாம்பா
இந்த அண்டத்தை உண்டாக்கி அதில்
மண் உருண்டை ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடம் கொடுத்தா மூகாம்பா

முன்னால சொல்லி வைச்ச உண்மை
எல்லாம் சொல்லப் போனா
பழையக் கதை என்று சொல்லும் இளவட்டமே
தந்தை தாயி இல்லாம தனக்குத்தானே பொறந்தாப்போல
தட்டுக்கெட்டு போகுதய்யா தரமட்டமே
முன்னால சொல்லி வைச்ச உண்மை
எல்லாம் சொல்லப் போனா
பழையக் கதை என்று சொல்லும் இளவட்டமே
தந்தை தாயி இல்லாம தனக்குத்தானே பொறந்தாப்போல
தட்டுக்கெட்டு போகுதய்யா தரமட்டமே

போதி மரத்தடியில்
புத்தனும் பொறந்து வந்து
போதி மரத்தடியில் புத்தனும் பொறந்து வந்து
புத்திமதி போதிச்சதும் போனதய்யா
சாதி மரத்தடியில் சாத்தான்கள் கூடி நின்னு
சத்தியத்தை கொன்னு சத்தம் போடுதய்யா

அமைதி என்று சொல்லிக்கொண்டு ஆயுதங்கள் செய்யுறோம்
அடுத்த வீட்டை எட்டிப்பார்த்து அங்கலாய்ச்சி ஏங்குறோம்
எந்திரத்தை சொந்தம் கொண்டு மனுச உறவை வெட்டுறோம்
எங்கயப் போய் இத்தனையும் repair செய்ஞ்சு கட்டுவோம்

மண்ணில் வாழப் புடிக்கலியே மூகாம்பா
எனக்கொன்னவிட்டா யாருமில்ல மூகாம்பா
மண்ணில் வாழப் புடிக்கலியே மூகாம்பா
எனக்கொன்னவிட்டா யாருமில்ல மூகாம்பா

என்னைப் பெத்த ஆத்தான்னு இசை எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூகாம்பா
இந்த அண்டத்தை உண்டாக்கி அதில்
மண் உருண்டை ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடம் கொடுத்தா மூகாம்பா

சின்னப் புத்தி உள்ள ஒரு
சின்னப்பய என்னையும்
சின்னப் புத்தி உள்ள ஒரு சின்னப்பய என்னையும்
தன்னுடைய புள்ளைம்பா மூகாம்பா
என்னக் குத்தம் செய்ஞ்சாலும்
மன்னிச்சு கருணைக் கொண்டு
தன்னோட அணைச்சுக்குவா மூகாம்பா

என்னைப் பெத்த ஆத்தான்னு இசை எடுத்து பாத்தா
இருக்குறது ஒரே ஒரு மூகாம்பா
இந்த அண்டத்தை உண்டாக்கி அதில்
மண் உருண்டை ஆக்கி உள்ளே
உனக்கும் எனக்கும் எடம் கொடுத்தா மூகாம்பா



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link