Azhagu Kutti Chellam

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

இறைவன் அவன்
உருவம் எது
நான் காண்கிறேன்
நீதான் அது

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

நீ யார்...
நீ யாரோ நான்தான்
நீயாய் மாறினாய்
நான் யார்
நான் யாரோ நீதான்
நான் என்று கூறினாய்

வேர் நான்
பூ நீதான் பூவே
வாசம் வீசினாய்
வாசம்...
என் சுவாசம் என்றும்
நீதானே

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது
அதை போல சுகம் இங்கு ஏது
உனக்காக பூ பூக்கும் பூமி
உனை தீண்ட மழையாகும் மேகம்

சொர்க்கத்தின் துண்டொன்று
மண்மீது வந்தே
கை நீட்டி விளையாட கண்டேன்...
இன்பத்தின் அர்த்தங்கள்
உன் முத்தம் என்றே
முத்தாட பித்தேறினேன்

நீ பேசும் பாசை
கேட்டால் போதும்
நான் கொண்ட எல்லா
துன்பமும் தீரும்
உன் பாதம் வீட்டில்
வந்தால் போதும்
உனக்காக வாழ்வேன் நான்

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்

இறைவன் அவன்
உருவம் எது
நான் காண்கிறேன்
நீதான் அது...

உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இந்த ஜென்மம் தீரும்
எந்தன் அழகு குட்டி செல்லம்



Credits
Writer(s): Na Muthukumar, Ved Shanker Sugavanam
Lyrics powered by www.musixmatch.com

Link