Unakkulle Mirugam

உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்

கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்கும்

எரிக்காமல் தேன் ஆடை கிடைக்காது
உதைகாமல் பந்து அது எழும்பாது
வலியது தான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்

உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்

கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடுக்கும்

எரிக்காமல் தேன் ஆடை கிடைக்காது
உதைகாமல் பந்து அது எழும்பாது
வலியது தான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்

நரகமதில் நீயும் வாழ்ந்தால்
மிருகமென மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து

உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலகணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து

இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதுக்கும் பகைவன் யாரும் இல்லையே
என்றும் நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே

வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்

முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
மறுபடி மரண அடி

அடிக்கடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழியும் திறந்த படி

நீதான் உனக்கு தொல்லையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டால் கிழிக்கும் முல்லையே
வலிகள் இருந்தும் வலிக்க வில்லையே

வலியது தான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link