Azhagho Azhaghu

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும்
அவள் நடையழகு
பத்தி எரியும்
அவள் உடையழகு

அய்யய்யோ
'சிக்'கென நடக்கும்
அய்யய்யோ
ஓவியம் அவளோ
அய்யய்யோ
சக்கரை தடவி
அய்யய்யோ
செஞ்சது உடலோ

அழகோ அழகு...
அழகோ அழகு...

எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு

அந்தியிலே வானம்
சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும்
வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது
என்ன சொல்லவோ... ஓ...

காட்டருவி போலே
அலை அலையாக
கண்டபடி ஓடும்
குழல் அழகு

கண்ணிரண்டில் வலையை
பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும்
செயல் அழகு

தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ...

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும்
அவள் நடையழகு
பத்தி எரியும்
அவள் உடையழகு

அய்யய்யோ
'சிக்'கென நடக்கும்
அய்யய்யோ
ஓவியம் அவளோ
அய்யய்யோ
சக்கரை தடவி
அய்யய்யோ
செஞ்சது உடலோ

(அய்யய்யோ...)
(அய்யய்யோ...)
(அய்யய்யோ...)
(அய்யய்யோ...)



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link