Avanapathi

அவன பத்தி நான் பாடப் போறேன்
இவன பத்தி நான் பாடப் போறேன்
அவனும் சரி இல்ல இவனும் தான் சரி இல்ல
எவனத்தான் நான் இப்போ பாடப் போறேன்

ஊர பத்தி நான் பாடப் போறேன்
உறவ பத்தி நான் பாடப் போறேன்
ஊரும் சரி இல்ல உறவும் தான் சரி இல்ல
யாரைத்தான் நான் இப்போ பாடப் போறேன்

காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நாம
அந்த நினைப்பில் ஆட்டத் தான் புலி தின்னு
புலியத் தான் காட்டானை மிதிக்குதுங்க

காட்டு குகையில் நாம் வாழ்ந்த காலம்
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி
எப்போதும் தணியாமல் துரத்துங்க

ஓ ஓ ஓ...

மனுசப் பயலின் ரத்தத்தில் இருப்பது உனக்கென்ன தெரியும்
ஹேய் ஹேய் நீராக தெரியும் நீரா அது
ஆறாக ஓடும் நெருப்பே அது

உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன
வலியிருக்கும் பழியிருக்கும்
வெறியிருக்கும் அட வேட்டை குணமிருக்கும்
களவிருக்கும் உலகிருக்கும்
கொலையிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும்

ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றேதான் வேறா என்ன

மெய் எல்லாம் பொய் ஆக பொய் எல்லாம் மெய் ஆக
மெய்யாக மெய்பொய்யின் மர்மம் என்ன
மெய் எல்லாம் மெய் இல்லை பொய் எல்லாம் பொய் இல்லை
மெய் மெய் மெய் பொய் பொய் பொய் மெய்யா என்ன

கண் இரண்டில் தினம் தோன்றும் காட்சி எல்லாம்
கண் விட்டு வெளியேறும் மர்மம் என்ன
கண் இரண்டும் உனதில்லை அதன் காட்சி உனதில்லை
அறியாத மட நெஞ்சில் மயக்கம் என்ன

இடுகாட்டில் தினம் பார்க்கும் சாம்பல் எல்லாம்
இதயத்தில் ஏறாத மர்மம் என்ன
மலர்ந்தாலும் உதிர்ந்தாலும் மடி ஏந்தும் மணலாக
மனம் வாங்கும் ஒரு தேடல் கொண்டால் என்ன

உயிருக்கு உயிரோடு பந்தோம் என்ன
உயிர் வாழ்ந்து அதை நீயும் உணர்ந்தால் என்ன
உயிர் வாழ்க்கை நிலையாமை மர்மம் என்ன
நிலையாமை நினையாமை கொண்டால் என்ன

ஈசல் போல் வாழ்ந்தாலும் ஈசன் தாள் தான் சேர்ந்து
தூசாகி தூளாகும் மர்மம் என்ன
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன

அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும் இறுதி என்ன
பிச்சைத் தான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும்
புழுவுக்கு இரையாவான் வேறே என்ன
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link