Edhedho Ennamvandhu - Solo Version

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோல் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசிக்கொண்டே
தென்றல் வந்து நிற்க கண்டேன்

போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்
இருந்தும் தூரங்கள் செல்வோம்
பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன் நான் வீழ்த்திடும் வரை

ஏதேதோ எண்ணம் வந்து...
என் நெஞ்சை தைத்து போக

தோழில் மெல்ல சாயும் நொடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டு உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி

அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும்
பந்தம் எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னால்
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக

என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்



Credits
Writer(s): Parvathy, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link