Vanakkam

ஏப்பா வீட்டுக்கு ஒரு ரெண்டு தேங்கா
மாமன் இதுக்கெல்லாம் குடுக்கனும்பா
மாசி கடச்சிக்கு ஒன்னு இல்லன சிக்கலாகி போகும்ல (சிக்கலாகி)
வாடா சாப்டு போவோம்
வீட்டு வீட்டுக்கு ஏழ்றுவா வரி வாங்கிருக்கு
கெடாயா பொழக்க வெட்டிப்போடனும்

(பழமிருக்கு... ஏது காளயிருக்கு, சோல)
ஏன் எவன்டா அவன் ரேடியோக்காரன்
அண்ணன் சொல்ன
ஏய் பெரிய மனுசங்கெல்லாம் பேசிக்கிருக்காங்கல
அமத்திப் போடுங்கட கொஞ்ச நேரம்
சரின சரின ஏய் அமத்தி போடுங்கடா

என்னடா கொட்டுக்காரன் வேசக்காரன் எல்லாம்
கட்சிக்கு சேத்தது மாதிரி வந்துட்டு இருக்காய்ங்க
சாப்டாய்ங்களா இல்லையா? (இல்லனே)
போய் நாட்டாம வீட்ல சாப்ட சொல்லுயா
போங்கட போய் காரவீட்டல போய்
கரிக்ஞ்சிய தெம்பா அடிங்கடா
சரின சரின ஏய் வாங்கப் போலாம்

யப்பா என்ன இது
தவசியோட கடைசி மயன் ஒரு பொம்பள பிள்ளைய கூட்ட வந்திருக்கயான்
அந்த பிள்ளைக்கு நம்ம ஊர்
பழக்கம் வழக்கத் தெரிஞ்சுக்கனுமா
அதான் கூட்டு வந்திரிக்கயான்
அப்புடி போடு

வணக்கம்
கல்யாண வீட்டுலையும் கெடா வெட்டி சோறு போட்டு வழக்கம்
வணக்கம்
காதுகுத்து வீட்டுலையும் கத்திக்குத்து நடப்பது வழக்கம்

வணக்கம்
பொண்ணுக்கு ஒரு லாரியதான் பொன் அளந்து கொடுப்பது வழக்கம்
வணக்கம்
பொட்டப்புள்ள பெத்துபுட்டா கள்ளிப்பால் ஊத்துவது வழக்கம்

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு

வர வைகாசி மாசம் 23'ஆம் தேதி
உனக்கும் அந்த புள்ளைக்கும், கல்யாணம்டா...

ஏ கண்ணுக்கழகா நின்ன
கண்டு தொலச்சன் ஒன்ன
தலதலனு மின்ன
பொங்க பச்பமா தின்ன

கண்டதும் நெஞ்சமோ அலையும் போயாச்சு
என்கப்புல பாதியோ களவு போயாச்சு... யா

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு

வணக்கம்
பாட்டன் கால வறுமைய பத்தி உட ஏங்குறது வழக்கம்
வணக்கம்
பத்தாம் வீட்டு கேது மேல பலியப்போட்டு தூங்குறது வழக்கம்

ஏ திந்தாத்த தினக்தா திந்தாதா தினக்
ஏ திந்தாத்த தினக்தா திந்தாதா தினக் தினக்

ஏ... கருவேளங்காட்டுக்குள்ள...
நடமாட்டம் ஏதும் இல்ல...
வாடி புள்ள வாடி புள்ள

ஜிந்தாத்த ஜினக்தா ஜிந்தாதா ஜினக்
ஜிந்தாத்த ஜினக்தா ஜிந்தாதா ஜினக்

ஆ... ஈசல் இறகு போல
ஆ எங்க புடிச்ச சேல
காட்டி மறைக்கும் வேள
கவுக்கதடி ஆள

ஈச்சம்பழமே உனக்கே கறஞ்சேனே வா
ஈர வெறகா மனசு பொகஞ்சேனே
யா யா யா ய

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு

வணக்கம்
உண்டியல காசு போட்டு ஊருக்காக வேண்டுவது வழக்கம்
வணக்கம்
ஊரு சாஞ்ச வேளையில உண்டியல உடைக்குறது வழக்கம்

வணக்கம்
விக்கிக்கிட்ட அப்த்தாக்கு பெட்டித்தண்ணி ஊத்துறது வழக்கம்
வணக்கம்
வேரும் தின்ன காத்தவள வேட்டு போட்டு தூக்குறது வழக்கம்

வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
எங்க ஊரு வணக்கம்



Credits
Writer(s): Nandhalala, Kavi Periyathambi
Lyrics powered by www.musixmatch.com

Link