Vinaa Vinaa - Karaoke Version

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணற் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
சிக்குதே சிக்குதே மனது பாவம் எனும் பொய் வலையில்

அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும்
இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய ஆவனம் செய்த அறம் நம்மை காத்திடும்

வினா வினா ஓர் வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே
புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே

பாறை மேலே தேரே போனால் பாத சுவடு இல்லையே
வேறை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே

கூறா மனமே ரகசியம்
உலகில் உறவே அவசியம்

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணல் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ



Credits
Writer(s): Na Muthukumar, Mohamaad Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link