Punniyam Thedi

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லோரும் அறிவார்
இந்த பாவப்பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யாரறிவார்
தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி

நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்றெண்ணி கொண்டேன்
இன்று அந்த சூரியனை ஏழை குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித்தந்தேன்

ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுகொண்டேன் மாற்றங்களை தந்தது நீ தானே

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன்
அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்
என்ன செய்து என்ன செய்து இந்த கடன் நான் தீர்ப்பேன்
பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்

எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்களில்லை பார்வை உண்டு கண்டு கொண்டேன்
ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையை கேட்டேன்

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே
பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லோரும் அறிவார்
இந்த பாவப்பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யாரறிவார்
தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி

புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

Credits
Writer(s): Bharathi Palani
Lyrics powered by www.musixmatch.com

Link