Endhan Naavil

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார்
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார்

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில்

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார்

அல்லேலூயா ஆனந்தம் கொள்ளுவேன் அல்லேலூயா அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் ஆனந்தம்
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தம்

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார்
பாவ இருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார்

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில்

எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில்

எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார்

அல்லேலூயா ஆனந்தம் கொள்ளுவேன் அல்லேலூயா அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் ஆனந்தம்
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தம்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில்

எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார்

இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்

Credits
Writer(s): Richard Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link