Vilakkuvecha Nerathile Mama

வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற

வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா
உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும்
பச்சைப் புல்லும் பாயா மாறும். பசியேக்கம் தானாத் தீரும்
ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது
நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது
பொழுதாச்சு விளையாட ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு
நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு
நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது
ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது
பொழுதாச்சு விளையாட. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா
நான் கொடுக்க அவன் குடிக்க. அந்த நேரம் தேகம் சூடு ஏற
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்



Credits
Writer(s): Muthulingam, Ilaiyaraaja, Pulamaipithan, Kamarajan Na
Lyrics powered by www.musixmatch.com

Link