Unnai Thaney Thanjam

உன்னைத் தானே
தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

உன்னைத் தானே
தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னைத் தானே

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக சிரிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக் குளித்தானே
இரவுகள் இதமானதா
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னை தானே
தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே

உலகம் எனக்கென்றும் விலங்கானது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

என்னைத் தானே
தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னைத் தானே
தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே



Credits
Writer(s): Ilayaraja, Muthulingam, Vali, Vairamuthu Ramasamy Thevar, Kamarajan Na, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link