Devi Sridevi Vun Thirumal

தேவி ஸ்ரீ தேவி
தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தன் அம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தன் அம்மா
மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலி பூசாரியே
பட்ட போடாத பூசாரி நான் பண்ண கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆணி பொன் மேனி அன்பன் தொட வேண்டுமே
எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே தவிச்சான் எனக்கா புரியாது

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை ஆகாதைய்யா
கண்ணில் நடமாடும் சிவகாமியே அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி எனக்கு நீ தான் அம்மா
செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் போய் சேராது
ததரினா தனா தனா
இந்த மோகம் ஒரு தலை ராகம் மயக்கம் தீராது

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

Credits
Writer(s): Vali, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link