Kaadhalicha Pachaikiliye (From "Iravu Paadagan")

பறிச்சாதான் பூவு
வாடும் என்பது இல்லடா
அது செடியிலேயே இருந்தாலும்
வாடித்தான் போகுமடா

காதலிச்ச பச்ச கிளியே
நீ வேலி தாண்டி வாடி வெளியே
நான் பூஜை செஞ்ச வஞ்சிமலரே
வாடுறேன்டி நானும் தனியே

ஆணைக் குற்றம் சொல்லாதே
அம்பைக் கொண்டு சாய்க்காதே
காதல் ஒரு பாவம் என்று கண்மணியே போகாதே

காதலிச்ச பச்ச கிளியே
நீ வேலி தாண்டி வாடி வெளியே
பூஜை செஞ்ச வஞ்சிமலரே
வாடுறேன்டி நானும் தனியே

உயிரென்ற ஒரு பறவை, அது உன்னோடு பறக்கட்டுமே
முடியாமல் போய்விட்டால், அந்த காற்றோடு கலக்கட்டுமே
என்னோட பொன்மானே, வீண் சந்தேகம் கொள்ளாதே
சந்தேகபுயல் அடித்தால் மானே, என் ஜீவன் தாங்காது ஞானபெண்ணே

காதலிச்ச பச்ச கிளியே
நீ வேலி தாண்டி வாடி வெளியே
நான் பூஜை செஞ்ச வஞ்சிமலரே
வாடுறேன்டி நானும் தனியே

முள்ளாடும் ரோஜாவே, மனதை தள்ளாட வைக்காதே
முந்தானை வலைவிரித்து, ஆணை கொல்லாமல் கொள்ளாதே
பூத்திட்ட தாமரைப்பூ, அது ஒருவருக்கே சொந்தமடி
பலர் வந்து தேன் எடுத்தால் மானே
இந்த உலகம் தாங்காது ஞானபெண்ணே

காதலிச்ச பச்ச கிளியே
நீ வேலி தாண்டி வாடி வெளியே
பூஜை செஞ்ச வஞ்சிமலரே
வாடுறேன்டி நானும் தனியே

பச்சைகுத்தி பார்த்தபோதும், இந்த பாவிமனம் வலிக்கலியே
நீ அள்ளிப்போட்ட வார்த்தை தானடி, என்னை நெருப்பாக சுடுகிறதே
வந்திடடி வண்ணக்கிளியே, வாசமுள்ள வஞ்சிக்கொடியே

என்னோட வசந்த முல்லையே
நீ இல்லாட்டி வாழ்க்கை இல்லையே

காதலிச்ச பச்ச கிளியே
நீ வேலி தாண்டி வாடி வெளியே
பூஜை செஞ்ச வஞ்சிமலரே
வாடுறேன்டி நானும் தனியே

ஆணைக் குற்றம் சொல்லாதே
அம்பைக் கொண்டு சாய்க்காதே
காதல் ஒரு பாவம் என்று கண்மணியே போகாதே

காதலிச்ச பச்ச கிளியே
நீ வேலி தாண்டி வாடி வெளியே
நான் பூஜை செஞ்ச வஞ்சிமலரே
வாடுறேன்டி நானும் தனியே



Credits
Writer(s): Rajeshkhanna
Lyrics powered by www.musixmatch.com

Link