Thenmadurai

தென்மதுர பாண்டி சீமயில
சாமி ஆளாகி நான் வாடுறன்
சோகம் தாளாம போராடுறன்
தென்மதுர பாண்டி சீமயில
சாமி ஆளாகி நான் வாடுறன்
சோகம் தாளாம போராடுறன்

ஏ பச்சக்கிளி பஞ்ச வர்ணக்கிளி
ஏ பச்சக்கிளி பஞ்ச வர்ணக்கிளி
நானும் உன்போல
கண்ணீரில் தான் வாழுறேன்

நாளும் முள்மீது கண்மூடி போராடுறேன்
பொன்மயிலே நானும்
உன்மயிலே உந்தன்
நிழலாகத்தான் வாழுறேன்
நெஞ்சம் ஒன்றாக நாள் கேட்குறேன்

என் பாடு பாவம் பெண்பாடு
ஏதோ விதி போகும் போக்கில்
நான் போகுறேன்

காலங்கள் மோசம் செய்தாலும்
உந்தன் கண்ணீரை மாற்ற
நான் வாழ்கிறேன்

திசை ஏதும் தெரியாமல்
தடுமாறுறேன்
இருளோடு விழிமூடி
விளையாடுறேன்

திசை காட்டி கரையேற்ற
ஆளில்லையோ
இருள் நீக்கும் விளக்காக
நானில்லயோ

வாய் வார்த்தை எல்லாம்
வாழ்வாகுமா
கண்ணீரும் கூட பொய்சொல்லுமா

தென்மதுர பாண்டி சீமயில
சாமி ஆளாகி நான் வாடுறன்
சோகம் தாளாம போராடுறன்

பொன்மானே என்ன போராட்டம்
நெஞ்ஜம் ஒன்றான சொந்தம்
பொய்யில்லையே

சொந்தங்கள் எல்லாம்
மாயங்கள் மின்னும்
மின்னல்கள் எல்லாம் விளக்கில்லையே

இடம்மாறி நின்றாலும் மனமொன்றுதான்
திசை மாறி நின்றாலும் நிலவொன்றுதான்
உறவென்ன சொன்னாலும் மனம் கேட்க்கல
மருந்தென்ன சொன்னாலும் வலிதீரல்ல
அலைபாயும் உள்ளம் தெளிவாகுமா
தெளிவான உள்ளம் அலைபாயுமா

தென்மதுர பாண்டி சீமயில
சாமி ஆளாகி நான் வாடுறன்
சோகம் தாளாம போராடுறன்

ஏ பச்சக்கிளி, பஞ்ச வர்ணக்கிளி
நானும் உன்போல
கண்ணீரில் தான் வாழுறேன்

நாளும் முள்மீது கண்மூடி போராடுறேன்
பொன்மயிலே நானும் உன்மயிலே
உந்தன் நிழலாகத்தான் வாழுறேன்
நெஞ்சம் ஒன்றாக நாள் கேட்குறேன்



Credits
Writer(s): Vairamuthu, K Bhagyaraj
Lyrics powered by www.musixmatch.com

Link