Endi Ippadi

நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி... ஏண்டி... ஏண்டி... ஏண்டி...

பூவாக நீ இருந்த
பூ நாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்த
ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி... ஏண்டி... ஏண்டி... ஏண்டி...

ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு

ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு

தேடி திரிஞ்ச கிளியே
நீ வந்திருக்க தனியே
காலம் கனியும் நமக்கு
இது காதல் தேவன் கணக்கு

காலம் போடும் கோலம்
அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நீயும்
அட ஜோடி சேர வேணும்

கல்கண்டு பாரு
அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு
என்ன தேடி வந்து சேரு

ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி... ஏண்டி... ஏண்டி... ஏண்டி...

உனக்காக காத்திருந்தேன்
அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன்
உள்ளுக்குள்ள பூத்திருந்தேன்
ஏண்டி...

காலத்துக்கும் நீயும்
என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும்
உன் நெனப்பு மட்டும் போதும்

நானாக நான் இருந்தேன்
நடுவுல நீ வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி... ஏண்டி... ஏண்டி... ஏண்டி... ஏண்டி... அட ஏண்டி... ஏண்டி...



Credits
Writer(s): Santosh Narayanan, Ganesh Kumar Krish
Lyrics powered by www.musixmatch.com

Link