Aaga Motham Ennai

ஹவா ஹவா வோக்கா வோக்கா
ஹவா ஹவா வோக்கா வோக்கா
ஹவா ஹவா வோக்கா வோக்கா
ஹவா ஹவா வோக்கா வோக்கா

ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா
மழை வருமென மனசுக்குத் தெரியுது

அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞ்சம்
தங்கச் சரிவினில் விழுந்தது நெஞ்சம்
என்ன என்ன இந்த இன்பம் ஹோ

பூக்கள் அவள் சொல்லில் மலரும்
என் சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
காலம் அவள் பின்னே நகரும்
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்

ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது

கண்கள் அது நட்சத்திர ஜன்னல்
பூக்கள் அது புன்னகையின் பின்னல்
பெண்ணே நதி வளைகின்ற துள்ளல்
எல்லாம் உன் அழகியல் தானோ

நிலவொளி வழிகிற மரங்களின் கீழே கொஞ்சம் நின்றேன்
கனவுகள் வருகிற விழியில் உன்னை மூடிக்கொண்டேன்
நினைவுகள் மறந்திட மறந்திட என்னைத் தேடிவந்தேன்
வந்தேன் வந்தேன் வந்தேன் உன்னோடு

பூக்கள் அவள் சொல்லில் மலரும்
என் சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
காலம் அவள் பின்னே நகரும்
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்

ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது

கூந்தல் அது கலைந்தது மெல்ல
காற்றில் என் தோளை பின்னிக் கொள்ள
நெஞ்சம் அட என்னென்னமோ சொல்ல
ஏனோ நான் தவிக்கிறேன் பெண்ணே

இரவெது பகலெது மயங்கிடும் மாயம் ஒன்று செய்தாய்
மரபுகள் புதுமைகள் இரண்டையும் மாற்றிவைத்து சென்றாய்
மலர்களின் மொழிகளில் ரகசியம் ஒன்றைச் சொல்லித் தந்தாய்
தந்தாய் தந்தாய் தந்தாய் நீதானே

பூக்கள் அவள் சொல்லில் மலரும்
என் சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
காலம் அவள் பின்னே நகரும்
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்

ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா
மழை வருமென மனசுக்குத் தெரியுது
என்ன என்ன இந்த இன்பம் ஹோ

பூக்கள் அவள் சொல்லில் மலரும்
என் சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
காலம் அவள் பின்னே நகரும்
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்

பூக்கள் அவள் சொல்லில் மலரும்
என் சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
காலம் அவள் பின்னே நகரும்
அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்

ஹவா ஹவா...



Credits
Writer(s): Pazhani Bharathi, Gopi Sunder
Lyrics powered by www.musixmatch.com

Link