Puthiya Manidha

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி hard disk'க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை, அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை, எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாயிரு
எந்த நிலையிலும்
உண்மையாயிரு

எந்திரா, எந்திரா, எந்திரா என் எந்திரா
எந்திரா, எந்திரா, எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமொழி
நீ பெற்றது நூறுமொழி

ஈரல் கனையம் துன்பமில்லை
இதயக்கோளார் ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
(புதிய மனிதா பூமிக்கு வா)
(புதிய மனிதா பூமிக்கு வா)

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒளி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

Robo robo பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா!
Robo robo பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா!

புதிய மனிதா பூமிக்கு வா
(புதிய மனிதா(புதிய மனிதா) பூமிக்கு வா(பூமிக்கு வா)
(புதிய மனிதா பூமிக்கு வா)
(புதிய மனிதா பூமிக்கு வா)



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link