Thom Karuvil Irunthom

தோம் கருவில் இருந்தோம்,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
தோம் தரையில் விழுந்தோம்,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.

அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே,
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே

தோம் கருவில் இருந்தோம்,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
தோம் தரையில் விழுந்தோம்,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.

கருவில் இருந்தோம்,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,

அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே,
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே
தண்ணீரில் வாழ்கின்றேன் நான் கூட மச்சாவதாரம் தான்

தோம் கருவில் இருந்தோம்,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,

அலைகளை அலைகளை பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவன் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜா திரவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வலி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கம் முடிவுமில்லை
கையில் கோப்பை இல்லை என்றால்,
கற்பனை வரைவது நின்றுவிடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்,
கவலைகள் நம் உயிரை தின்று விடும்

தோம் கருவில் இருந்தோம்,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
தோம் தரையில் விழுந்தோம்,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.
அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே,
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவேயோடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை
இந்த கின்னம் தானே பிடிமானம் வேருஇல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா?
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறதே
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறகிரதே
தோம் கருவில் இருந்தோம்,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்,
தோம் தரையில் விழுந்தோம்,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்.

அப்போது அப்போது போன தூக்கம்
என் கண்களிலே, எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link