Andha Arabic Kadal

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஏ பள்ளித்தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதமோ
சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆளைக் கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

(அந்த அரபிக்கடலோரம்)

சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்தபின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கண்கள் கடந்தபின்னும் காதல் மலர்ந்துகிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா ஹம்மா

(அந்த அரபிக்கடலோரம்)



Credits
Writer(s): A. R. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link