Naan Maati Konden

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

நானே மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
உன் குரலுக்குள் இனிமை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே...
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்
பார்வையில் உன் வார்த்தையில்

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
தமிழுக்குள் போதை போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

வேண்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கவிதைக்குள் குழப்பம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

எல்லை மீறாமலே
சிறு நெருக்கம் நெருக்கம்
கைகள் தீண்டாமலே
உன் இதயம் திறக்கும்

இசையாய் விரிந்தாய்
நிறமாய் இறைந்தாய்
மணமாய் நிறைந்தாய்
சுவையாய் கரைந்தாய்

உன்னுள்ளே செல்லச் செல்ல
இன்னும் உன்னைப் பிடிக்கையிலே
இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா

என் நெஞ்சின் மேடை இங்கே
உன்னை ஆட அழைக்கையிலே
கால்கள் வேண்டாம் காதல் போதாதா

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கோவில் உள் கடவுள் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

தானாய் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கர்ப்பத்தில் சிசுவைப் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே...
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்
பார்வையில் உன் வார்த்தையில்

ஹோ மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
மண்டைக்குள் பாடல் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

மாட்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
ஆசைக்குள் ஏக்கம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்



Credits
Writer(s): Gopi Sunder, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link