Yedho Maayam Saeigirai

என் மனசுல நேத்து வரைக்கும்
எதுவுமே இல்ல
ஆனா அவ வந்ததுக்கு அப்புறம்
இப்ப இடமே இல்லை
வெறுமையா இருந்த நான்
முழுமையான மாறி ஒரு நிறைவு
சுத்திலும் பனியா இருந்தாலும்
மனசு வேர்க்குது
என்னடா இது புதுசா இருக்குன்னு
சிரிக்கத் தோணுது
எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல
ஆனா ஏதோ ஆச்சுன்னு மட்டும் தெரியுது
அவள மறுபடியும் பாத்தா
இங்கே இருந்துருவேன் இல்லனா

என்னென்னமோ என்னென்னமோ
என்னென்னமோ எனக்குள் ஆகுதே
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே

திசைகள் முழுவதும் பனிமலை
எனக்குள் ஏனடி எரிமலை
கடந்து போனாய் ஒருமுறை
கரைந்து போனேன் பலமுறை
ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை
காற்றென சாய்த்துவிட்டாய்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய் ஓ
ஏதோ மாயம் செய்கிறாய் ஹோ

யாரோ நீ யாரோ நான்
என்றே நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா

இங்கே நான் இருப்பேனா
உயிர் கொடுப்பேனா
உன்னைக் காதலிப்பேனா

அன்பாலே ஜெய்ப்பேனா
உன்னை மணப்பேனா
யுகம் காத்திருப்பேனா

இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்தி போகுமா
உருகுதே உருகுதே மனம் ம்ம்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்

இதே நாள் இதே நாள்
என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்
இதே போல் இதே போல்
உன்னோடு நடந்திட வேண்டும்

நீ வாங்கும் காற்றோடு
நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும்
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி
உன்னைப் பார்த்திட வேண்டும்

இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்திப் போகுமா
உருகுதே உருகுதே மனம் ம்ம்

ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்
ஏதோ மாயம் செய்கிறாய்



Credits
Writer(s): D. Imman, Mohan Raj
Lyrics powered by www.musixmatch.com

Link