Aasai Kadhal Aaruyirae

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல் ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல் ஆகுவதோ

காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்
வாயில்லாத குழந்தை போல்
வார்த்தையின்றி கரைகிறேன்

ஓ காற்றைபோல காதல் ரெண்டும்
தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும்

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

காதல் என்னும் கல் வீசி
பேதை நெஞ்சை உடைத்தாய்
என் மனதில் சொல்லாமல் எல்லை மீறி நுழைந்தாய்
என்னுயிரே பிரியாதே என்ன செய்வாள் சிறுமி
ரெக்கை உண்டு பறக்காதே சின்னஞ்சிறு குருவி
என்னவனே என்னவனே உனது உடலில் எனது குருதி வழியுதே

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

ஓடி வந்து வாய் பேச ஊமை மனம் துடிக்க
வேதனையை சொல்லாமல் வேலிகளும் தடுக்க
நத்தமெல்லாம் நாறாகி செம்மண்ணிலே கலக்க
பொத்திவைத்த புது நேசம் சத்தமிட்டு வெடிக்க
உன்னுடைய காயங்களில் எனது விழிகள் உனது துளிகள் மறந்திட மறந்திட மறந்திட

ஆசை காதல் ஆருயிரே(ஆருயிரே)
அனாதை போல ஆகுவதோ(அனாதை போல ஆகுவதோ)
ஆசை காதல் ஆருயிரே(ஆசை காதல் ஆருயிரே)
அனாதை போல ஆகுவதோ(அனாதை போல ஆகுவதோ)

காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்(எரிகிறேன்)
வாயில்லாத குழந்தை போல்
வார்த்தையின்றி கரைகிறேன்
ஓ காற்றைபோல காதல் ரெண்டும்
தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும்(காயம் பேசும்...)



Credits
Writer(s): Imman David, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link