Suthudhu Suthudhu (From "Kanden Kadhalai")

கொக்கே கொக்கே பூவ போடு
மக்க மக்க கொலவ போடு
கெழக்க மேற்க வேட்ட போடு
இதமா பதமா கம்மல் போடு

விளையாட்டு பயலுங்க யாரு வெண்டக்கா கம்பல போடு
பணக்கார மாமன் தான் யாரு வைரத்தில் லோலாக்கு போடு
வலி ஏதும் இல்லாம துளி ரத்தம் சிந்தாம தோடு போடு
சித்தப்பு பெரியப்பு சீரோடு விருந்தொன்னு போடு போடு
ஒ ஒ...

சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்னா கூட தீராது

சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்னா கூட தீராது

கத்தி எரிஞ்சது போல நீ குத்தி இழுப்பதுனால
பஞ்சு வெடிப்பது போல என் நெஞ்சு துடிப்பதுனால
அடி மயிலே என் மனசுகுள்ள தகராறு

சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்ன கூட தீராது

உனகொர் பேர் தான் கிடையாது
அத நான் சொல்ல முடியாது
கடல பிடிச்சு கையில் அடைக்கிட தெரியாது

உனகொர் பேர் தான் கிடையாது
அத நான் சொல்ல முடியாது
கடல பிடிச்சு கையில் அடைகிட தெரியாது

விண்ணில் போனா நிலவாகும் மண்ணில் வந்தா மழையாகும்
கோவில் போனா சிலையாகும் கொடியில் பூத்தா மலராகும்
ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா உனது பேரே அழகாகும்

சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்னா கூட தீராது

அழகே உன்னை பார்க்கத் தானே அத்தனை ஊரும் வருகிறதே
தென்னங்காயில் கூட தான் மூணாம் கண்ணு முளைக்கிறதே
அழகே உன்னை பார்க்கத் தானே அத்தனை ஊரும் வருகிறதே
தென்னங்காயில் கூட தான் மூணாம் கண்ணு முளைக்கிறதே

சந்தப் பக்கம் நீ போனா சந்திரன் வந்து கடை போடும்
அந்த பக்கம் நீ போனா மின்னல் உன்ன எடை போடும்
ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா எல்லோர் மனசும் தடுமாறும்



Credits
Writer(s): Na. Muthukumar, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link