Neeyum Bommai

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை

அன்பின் அனைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

அன்பின் அனைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்பச் சோலையில் இயற்கை பொம்மை
அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தருமமும் பொம்மை
வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை



Credits
Writer(s): S Balachander, Vidwan V Lakshmanan
Lyrics powered by www.musixmatch.com

Link