Bakyamthan Lakshmi Varumama

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க...
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
தினகரன் கோடி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
குங்கும பூவாய் பங்கயப் பாவை
வெங்கடரமனின் பூங்கொடி வாராய்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
சக்திக் ஏத்தபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்து
சுக்கிர வார பூஜையில் இருந்து
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்து
சுக்கிர வார பூஜையில் இருந்து
அக்கறையோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விதலனை அழைத்து

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா



Credits
Writer(s): Pradeep, K.v Sridharan
Lyrics powered by www.musixmatch.com

Link