Perai Sollavaa

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம் எந்நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா

தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீ ராகம் எந்நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை சொல்லவா

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா

இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்ப லோகமே உன் கண்கள் தானடி
மலர் எனும் முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
ப-ப-ப-ப-பா
ப-பா-பா-பா-ப-ப

புது மழை இது சுவை தரும் மது
வைரப் பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது கனிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இது தான் உலகத்து ரசிக்கின்ற பருவம்

தங்க மாங்கனி என் தர்ம தேவதை
ப-ப-ப-ப-பா
ப-ப-ப-பா-பா-பா-பா

நவமணி ரதம் நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலை உந்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்களம்
ஓர் ஆயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினம் நீந்துவோம்
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீ ராகம்

லா-லா-ல-லா, லா-லா-ல-லா
லா-லா-ல-லா, லா-லா-ல-லா
பா-ப-பா-ப-பா
ப-ப-ப-ப-பா-ப-பா



Credits
Writer(s): Kannadasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link