Malliga Mottu (From "Sakthivel")

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதையா மீனே
மூடி வச்சு மூடி வச்சு மறச்சுவச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு கலஞ்சு போனதென்ன
பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்கம்
நானிருந்தேன் சும்மா வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா ஹோ
நீயே அடையாளம் போடவா
பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து
அலையுதொரு குருவி
கீச்சு கீச்சு பேசுதையா
மனச கொஞ்சம் துருவி

பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதையா மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்திலே
மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதையா மீனே



Credits
Writer(s): Ilaiyaraaja, Kamakodeyen
Lyrics powered by www.musixmatch.com

Link