Amman Koyil Ellamae Enthan (From "Rajavin Parvaiyile")

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா

உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்
பாவையை கண்டால் பருவத்தில் கவனம்
பார்க்கின்ற வேளையில் மகன் மணம் சிதறும்

அவன் மனமோ அது எங்கே சென்றாலும்
இவள் மனமோ அது பின்னாலே போகும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா

உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
காமுகன் ஆனாலும் கல்நெஞ்சன் ஆனாலும்
கயவன் என்றே அவன் பெயரெடுத்தாலும்
பொய் சொல்லி பிழைக்கும் பிள்ளை என்றானாலும்
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்

தன்மகனோ அவன் யாரான போதும்
அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா

உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா
நின்றாலும் எங்கு சென்றாலும்
எப்போதும் எது செய்தாலும்
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்

அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம் அம்மா



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link