Chandira Mandalathai

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
இந்த பூமியை மெல்லமெல்ல மாற்றுவோம்
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்
புத்துலகம் கண்டு வைப்போம்

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

கண்ணில் ஒரு கள்ளம் இல்லை விண்வெளியில்
பறக்க ஒரு visa தேவையில்லை கை விலங்கு ஏதுமில்லை
பூமி ஒரு பள்ளிக்கூடம் பூவை மட்டும்
படித்திருப்போம் புத்தகம் தேவையில்லை எங்கள் புத்தியில் பாரமில்லை
ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால் நட்பை வளர்க்கலாம்
ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம்
நாம் கண்டோம் புதிய இயக்கம்
இது கண்ணீர் துளியை ஒழிக்கும்
நாம் காணும் கனவு பலிக்கும்
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால் கட்டுக்கதை
கட்டி இந்த ஊரும் சிரிக்கும் அது உண்மையை எரிக்குமே
தண்ணீரிலே தன்னை சுற்றி தவளைகள் கத்தும்
போதும் தாமரை மலருமே ம்ம்ஹும் தாமரை மலருமே
வானில் விடும் பட்டம் போலே வட்டம் அடிக்கலாம் ஹேய்
வால் முளைத்த ஜீவன் போலே கோட்டம் அடிக்கலாம்
இனி போதாதிந்த உலகம்
நாம் காண்போம் பத்தாம் கிரகம்
அங்கு இல்லை இல்லை மரணம்
எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்

சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம் சொல்லி வைப்போம்
இந்த பூமியை மெல்லமெல்ல மாற்றுவோம்
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்
புத்துலகம் கண்டு வைப்போம்

Credits
Writer(s): Vidyasagar, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link