Kadalamma Kadalamma

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

அவ உச்சி பாற ஓரமா ஓரமா ஓரமா

நான் தண்ணிக்குள்ளே தூரமா தூரமா தூரமா

நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு
நாக்கு மட்டும் வத்தி விட்டதே

ஓடம்பத்தான் கட்டி வசேன் உயிர் கயிரில்
இப்ப ரொம்ப இத்து விட்டதே

என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்
நெஞ்சு வேகாது கண்ணம்மா

உன்ன காணாம உயிர் சேராம
என் கண்ணீரு தீருமா

கண்ணீரு கடலுக்குள் விழுந்தால் கடலுக்கு சொந்தமடி

கண்ணீரு முத்தா விளஞ்சா எடுத்துக்க நல்லபடி

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

தூதுவிட்ட அலை அட எந்த அலையோ
என்ன வந்து சேரலையே

தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே

வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையா

நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்
இந்த கண்ணீரு தேவையா

கடல் தண்ணீர் அடிக்கிற அலையில கரையே மூழ்கிடுமோ
உன் கண்ணீர் அடிக்கிற அலையில கடலே மூழ்கிடுமோ

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

அவ உச்சி பாற ஓரமா ஓரமா ஓரமா

நான் தண்ணிக்குள்ளே தூரமா தூரமா தூரமா

நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா



Credits
Writer(s): Vidyasagar, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link