Oxygen

Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே

ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே

கலாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்

Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
போனாய் எதனாலே,போனாய் எதனாலே, எதனாலே
ஓஹோ ஹ்ம்ம்...

உலா உலா கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும் எனை கொய்யும் தென்றலா
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததாய் சேலை cindrella

வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன்
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன்

காலம் அது தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்

Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே

தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது

எடை இல்லா பொருளல்ல
அடி காதல் மனது அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு

ஆளற்ற அறையில் கூட
அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை

மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை
மீண்டும் ஒரு காதல் செய்ய
கண்களில் ஈரம் இல்லை

Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே

ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே

கலாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்

என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்



Credits
Writer(s): Kabilan, Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link