Love Pannu (Oru Punnagai Poove)

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
Love பண்ணு
Love பண்ணு
ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
Love பண்ணு
Love பண்ணு

சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
உடாதம்மா
பீலாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சுத்தாதம்மா
ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
Winter season வேண்டுமா
நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா
Love பண்ணு

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
Love பண்ணு(Love பண்ணு)
Love பண்ணு(Love பண்ணு)

எண்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா
மெய்யாலுமா
மெய்யாலுமா
சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா
மெய்யாலுமா
மெய்யாலுமா

அட வெள்ளை வெள்ளையாய்
ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே
இரு நிலவு வேண்டுமா

உன்னை காலை மாலையும் சுற்றி வருவது காதல் செய்யவே
Love பண்ணு
ஐயோ பண்ணு

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
Love பண்ணு
Love பண்ணு
Love பண்ணு
ஐயோ பண்ணு

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம்
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நீ கெஞ்சி கேட்கும் நேரம்
என் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ



Credits
Writer(s): J Harris Jayaraj, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link