Poove Vai Pesum Pothu

பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால்
நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்

பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால்
நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்

பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே

பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே

காதலன் ஆணைக்கு
காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
உன் சுவாச பாதையில்
நான் சுற்றி திருகுவேன்
உண் சுவாச பாதையில்
நான் சுற்றி திருகுவேன்

ஏன் மௌனம் என்னும்
பூட்டை உடைக்கிறாய்
என்ன நான் சொல்வேன்

பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு

நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை

நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
என் நினைவு தோன்றினால்
துளி நீரை சிந்திடு
என் நினைவு தோன்றினால்
துளி நீரை சிந்திடு

அடி நூறு காவியம்
சொல்லி தோற்றது இன்று
நீ சொல்வது

பூவே வாய் பேசும்போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால்
நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன்
மன்றாடுவேன்...



Credits
Writer(s): J Harris Jayaraj, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link